பண்ருட்டி:
               பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் ஆற்றுத் திருவிழாவை கெடிலம் நதியில்  நடத்த தடை விதிக்க வேண்டும் என ஆட்சியர், மாநில மாசு கட்டுப்பாட்டு  வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் எஸ்.வடிவேலன் மனு  அனுப்பியுள்ளார். 
வழக்கறிஞர் எஸ்.வடிவேலன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:  
              தை  பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பண்ருட்டி கெடிலம் நதியில் ஆற்றுத் திருவிழா  நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்துகொள்வர்.  தற்போது  கெடிலம் நதியில் நகர நிர்வாகம் குப்பைகளை கொட்டி நதியின் புனிதத்தையும்,  சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் லிங்க் ரோடு சீரமைப்பு  என்ற பெயரில் 15 வார்டு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களை  கால்வாய் மூலம் கெடிலம் நதியில் கலக்கக்கூடிய அபாயகரமான சூழ்நிலையை  ஏற்படுத்தியுள்ளது. 
              இந்நிலையில் பண்ருட்டி நகராட்சி சார்பில் வரும்  19-ம் தேதி கெடிலம் நதியில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.  தற்போது  உள்ள நிலையில் கெடிலம் நதியில் ஆற்றுத் திருவிழா நடைபெறுமானால், அதில்  கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு சொல்ல இயலாத வியாதிகள் ஏற்படும். மேலும்  மணல்  அள்ளிய பள்ளத்தில் குப்பைகள் தேங்கி புதைகுழிபோல் தண்ணீர்  தேங்கியுள்ளது. திருவிழா சமயத்தில் வருபவர்கள் இதில் தவறி விழுந்தாலோ  அல்லது குளிக்க இறங்கினாலோ உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. 
                 திருவிழாவுக்காக  நதியை சுத்தம் செய்ய நகராட்சியின் பொது நிதி பெருமளவில்  வீணாகும். எனவே  ஆற்றுத் திருவிழா நடைபெறும் கெடிலம் நதியின் நிலையை நேரில் ஆய்வு செய்து  நகராட்சி நிர்வாகத்தில் நடத்தப்பட உள்ள ஆற்றுத் திருவிழாவை நடத்த கூடாது என  தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக