உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், ஜனவரி 04, 2011

வாடகை கட்டடத்திற்கு மாறியது குமராட்சி போலீஸ் ஸ்டேஷன்

காட்டுமன்னார்கோவில் : 

           குமராட்சியில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இயங்கி வந்த போலீஸ் ஸ்டேஷன் தனியார் வாடகை கட்டத்திற்கு மாற்றப்பட்டதால் போலீசார் நிம்மதியடைந்தனர்.

            சிதம்பரம் அடுத்த குமராட்சி போலீஸ் ஸ்டேஷன் கடந்த 1939ம் ஆண்டு கட்டப்பட்டு ஒட்டு கட்டடத்தில் கடந்த 71 ஆண்டுகளாக இயங்கியது. பாழடைந்த அந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. மழையில் கட்டடத்தில் ஒழுகியதால் நிற்பதற்கு கூட இடமின்றி தஸ்தாவேஜிகளை பாதுகாக்க போலீசார் படாதபாடு பட்டுவந்தனர். அத்துடன் கட்டடத்தில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் போலீசாரை அச்சுறுத்தி வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே கட்டடம் மிக மோசமான நிலைக்கு மாறி போலீசார் அச்சத்துடனே பணிபுரிந்து வந்தனர். 

             புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 1ம் தேதி முதல் போலீஸ் ஸ்டேஷன் குமராட்சி அக்ரகாரத் தெருவிற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட துவங்கியுள்ளது. குமராட்சி போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம் செய்யப்பட்டதால் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் நிம்மதியடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior