உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, பிப்ரவரி 26, 2011

கடலூர் மாவட்டத்தில் மின் திருட்டு குறித்து தகவல் தந்தால் வெகுமதி

கடலூர்:

              மின் திருட்டு குறித்து தகவல் தந்தால் வெகுமதி வழங்கப்படும், மேலும் தகவல் அளிப்போரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மின் வாரியம் அறிவித்து உள்ளது.  

கடலூர் மின் வாரிய செயற்பொறியாளர் சி.மூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

           மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்தி, மின் திருட்டை அறவே ஒழிக்குமாறு மின் நுகர்வோர் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மின் திருட்டு பற்றி தகவல் தெரிவிப்போருக்குத் தகுந்த வெகுமதி வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிக்கும் நபர் பற்றிய தகவல்கள் ரகசியமாகப் பாதுகாப்பப்படும்.  மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு வாரியப் பணியை முறையாகச் செய்வதற்கு, மின் நுகர்வோர் உரிய ஒத்துழைப்பு அளிப்பதுடன் மின் சேமிப்பின் அவசியத்தையும் கருதி, விதிமுறைகளை தவறாது கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

                மின் திருட்டில் ஈடுபடுவோரது மின் இணைப்பு  துண்டிக்கப்படுவதுடன், அபராதம், சிறை தண்டனைக்கு ஆளாக நேரிடும். மின் நுகர்வோர் தங்களது மின்சார மீட்டரைத் தவிர்த்தல், சேதப்படுத்துதல், அதில் உள்ள பாதுகாப்பு முத்திரைகளைச் சேதப்படுத்துதல், போலி முத்திரைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றிóல் ஈடுபட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்கும்.  வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படும் மின்சாரம் வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அண்டை வீட்டின் பயன்பாட்டுக்கோ, தொழிற்சாலைக்கோ. கட்டுமானப் பணிக்கோ பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதம், சிறை தண்டனைக்கு உரிய குற்றமாகும்.  

                  விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை, தொழிற்சாலைக்கோ, கட்டுமானப் பணிக்கோ, நீர் இறைத்து விற்பனைக்கோ, செங்கல் சூளைக்கோ, வீட்டு உபயோகத்துக்கோ பயன்படுத்தினால், மின் இணைப்பு துண்டிப்பு, அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்கும்.  கட்டுமானப் பணிகளுக்கு தனி மின் இணைப்பு பெற வேண்டும். குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஒரு 40 வாட்ஸ் விளக்கு, 70 வாட்ஸ் இலவச வண்ணத் தொலைக்காட்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூடுதல் மின் பளு உபயோகித்தால், மின் துண்டிப்பு, அபராதம், சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior