உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 26, 2011

சிதம்பரம் அருகே தேர்தல் புறக்கணிப்பு பேனர்

கிள்ளை:

         சிதம்பரம் அருகே கிள்ளை சிசில் நகரில், தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

               கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை சிசில் நகரில், சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் சிவா, ஆலோசகர் சித்தம்மா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

                கூட்டத்தில், எஸ்.டி., இருளர் வசிக்கும் பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு இருளர் ஜாதிச்சான்று வழங்க வேண்டும். ரேஷன் கார்டு, வீட்டுமனை மற்றும் வீட்டு மனை மாற்றம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், பழங்குடி இருளர் நல வாரியம் அமைக்க ‌வேண்டும். ஓட்டுரிமை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, குடிநீர், மயானம் மற்றும் சாலை வசதிகள், தனி ரேஷன் கடை, எஸ்.டி., - எஸ்.சி., இனத்தவருக்கு தனி போலீஸ் ஸ்டே ஷன் அமைக்க ‌வேண்டும்.அரசு அறிவித்தது போல், எஸ்.டி.,யினருக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம், இலவச "டிவி', காஸ், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,  தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior