உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, பிப்ரவரி 26, 2011

மெக்சிகன் பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

            அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கவியல் துறை கல்வி பரிமாற்றம் செய்து கொள்ள அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  

           பல்கலைக்கழக துணைவேந்தர் விடுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மெக்சிகன் பல்கலைக்கழக உலக சுகாதார மைய இயக்குநர் டாக்டர் சோபியா மெஹ்ஜ்வேர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.  நிகழ்ச்சியில், மெக்சிகன் பல்கலை இணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் பாலகிருஷ்ணன், செயல் இயக்குநர் ராணிகோட்டா, மருத்துவப் புல முதல்வர் என்.சிதம்பரம், மருந்தாக்கவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

                 இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் அமெரிக்க மருந்து முறைப்பணி நடைமுறைகளை அறிந்து கொள்ள முடியும்.  மேலும் நாட்டிலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களை விட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் படிக்கும் டி.பார்ம் பிரிவு மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களாகவும், உயர் கல்வித் தரத்தையும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior