திட்டக்குடி :
திட்டக்குடியில் வருவாய்த் துறையினரால் கைப்பற்றப்பட்ட உயர் ரக மரங்கள் அலுவலக வளாகத்தில் மக்கி மண்ணாகி வருகிறது. திட்டக்குடி பகுதிகளில் அனுமதியின்றி வெட்டப்பட்டு கடத்தப்படும் மரங்கள், மணல், கிராவல் ஏற்றிச்செல்லும் வண்டிகளை வருவாய்த் துறையினரால் சோதனை செய்யப்பட்டு அலுவலக வளாத்தில் கொண்டு வந்து நிறுத்துவது வழக்கம்.
இதில் மணல், கிராவல் ஏற்றி வரும் வாகனங்களுக்கு வழக்கும், அதற்கான அபராதத் தொகையும் விரைவாக முடிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறது. ஆனால், கைப்பற்றப்பட்ட தேக்கு, வேம்பு உள்ளிட்ட உயர்ரக மரக்கட்டைகள் குறித்த வழக்குகள் முடிக்கப்படாமல் பல மாதங்களாக மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் மக்கி மண்ணாகி வருகிறது. இந்த மரங்களை ஏலம் விட்டால் அரசுக்கும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு வீணாகிக் கொண்டிருக்கும் மரங்கள், மரத்துண்டுகளை விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக