கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 242 பேருக்கு செல்போனில் பேசுவதற்கான சிம்கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் சீத்தாராமன் கலந்து கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிம்கார்டுகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-
மாவட்ட எல்லையோரங்களில் இரட்டை வாக்காளர் அடையாள அட்டையை பயன் படுத்துவதை தடுக்கும் வகையில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநில கலெக்டர்களின் ஆலோசனை கூட்டம் புதுச் சேரியில் விரைவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,945 வாக்குச்சாவடிகளில் கிராமப் புறங்களில் 1,200 வாக்காளர் கள் உள்ள வாக்குச்சாவடி களையும், நகர்புறங்களில் 1,400 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளையும் இரண்டாக பிரிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தர், தொழில் நுட்ப துறை தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பதட்டம் நிறைந்த 230 வாக்குச்சாவடிகளில் எம்.இ, எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர்த்தி வெப் கேமரா மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இருக்கிறார்கள். இவற்றை ஒருங்கிணைந்து பயிற்சி அளிப்பதற்காக கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மாவட்டத்தில் உள்ள 1,945 வாக்குச்சாவடிகளையும் நேரில் பார்வையிட்டு அங்கு கதவு, ஜன்னல்கள் முறையாக உள்ளனவா, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக சாய்தள வசதி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று 188 மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் பார்வையாளர் கள் தங்குவதற்கு வசதியாக கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், பெண்ணாடம் ஆகிய 5 இடங்களில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் அங்கு கம்ப்யூட்டர், டெலிபோன், இன்டர்நெட் மற்றும் டி.வி. உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுக்கான படிவங்கள் வந்துள்ளன. அதை யாரிடம் கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவுரை கடிதம் வந்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த பணியை கண்காணிப் பார்கள். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அடங்கிய புத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக