உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 11, 2011

தமிழ்நாடு முழுவதும் வரும் கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பில் ஒரே பாடத்திட்டம்

           தமிழ்நாடு முழுவதும் அடுத்த கல்வி ஆண்டு முதல் பி.எட்.படிப்பில் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பத்மநாபன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பத்மநாபன்  கூறியது:-

           தமிழ்நாட்டில் அரசு பி.எட். (கல்வியியல் கல்லூரிகள்) கல்லூரிகள், அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், சுயநிதி பி.எட். கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கும் மேலாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் தபால் வழியில் பி.எட். படிப்பு உள்ளன.. ஆனால் பாடத்திட்டத்தில் மாற்றம் உள்ளது. இதை சரியாக ஒரே பாடத்திட்டமாக கொண்டு வர தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

            அதன்படி வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பி.எட். படிப்பிலும் ஒரே கல்விதிட்டம் கொண்டுவரப்படுகிறது மேலும் பிளஸ்-2 படித்துவிட்டு அந்த மாணவர்கள் பட்டப்படிப்புடன் பி.எட். படிப்பும் சேர்த்து படிக்கும் ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட். படிப்புகள் தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த படிப்பு கல்லூரிகளில் தான் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த படிப்பு 4 வருட படிப்பாகும். நல்ல கட்டமைப்பு வசதி உள்ள கல்லூரிகளில் தான் இந்த படிப்புக்கு அனுமதி கொடுக்கப்படும். இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல் மற்றும் 2-வது செமஸ்டர் படிப்புக்கு பாடத்திட்டம் எழுதப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளோம். அனுமதி கிடைத்த உடன் படிப்பு தொடங்கப்படும்.
            பி.எட். படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதியில் எந்த வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவித்தபடி மே மாதம் 25-ந்தேதி தேர்வு தொடங்குகிறது. இந்த பல்கலைக்கழகம் தொடங்கிய பின்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்தார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior