உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 11, 2011

நிலுவையில் உள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்

            தற்போது நிலுவையாக உள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,


             13-4-2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவைத்தேர்தலில் தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க ஏதுவாக 100 சதவீதம் பிழையற்ற புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க முனைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 2010-ம் ஆண்டிலும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பின்போதும் வாக்காளராக பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கடந்த மாதம் 12-ந் தேதி, 19-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

             தற்போது நிலுவையாக உள்ள அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த முகாம்கள் ஊரகப்பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களிலும், நகர்ப்புறங்களில் நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் சென்னையைப் பொறுத்தவரையில் மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையங்களிலும் வழக்கமாக இந்த அட்டை வழங்கப்படும்.

               எனவே, 2010 மற்றும் 2011 வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின்போது பதிவு செய்துகொண்டு இதுவரை அடையாள அட்டை பெறாத வாக்காளர்கள் அனைவரும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அடையாள அட்டை பெற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior