உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 02, 2011

2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர்:

              சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.  

             கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் 2011-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், 10-1-2011-ல் வெளியிடப்பட்டது.  தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தொடர்ச்சியாகத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 16-3-2011 வரை 37,271 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை அடிப்படையில் 31,140 மனுக்கள் தகுதியானவை என்று கண்டறியப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.  

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தற்போது உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை தொகுதி வாரியாக:  


கடலூர் மாவட்டம்

மாவட்ட மொத்த வாக்காளர்கள் 16,76,117. 
ஆண்கள் 8,52,305. 
பெண்கள் 8,23,812. 

திட்டக்குடி (தனி): 

மொத்தம் 1,75,724. 
ஆண்கள் 88,711.
பெண்கள் 87,013. 

விருத்தாசலம்: 

மொத்தம் 1,95,839. 
ஆண்கள் 1,00,054. 
பெண்கள் 95,785. 

நெய்வேலி: 

மொத்தம் 1,66,077. 
ஆண்கள் 85,486. 
பெண்கள் 80,591. 

பண்ருட்டி: 

மொத்தம் 1,93,886. 
ஆண்கள் 97,252.
பெண்கள் 96,634. 

கடலூர்: 

மொத்தம் 1,81,846. 
ஆண்கள் 90,834. 
பெண்கள் 91,012. 

குறிஞ்சிப்பாடி: 

மொத்தம் 1,81,881. 
ஆண்கள் 93,381. 
பெண்கள் 88,500. 


புவனகிரி: 

மொத்தம் 2,07,469. 
ஆண்கள் 1,05,864. 
பெண்கள் 1,01,605. 

சிதம்பரம்: 

மொத்தம் 1,91,399. 
ஆண்கள் 96,560. 
பெண்கள் 94,839. 

காட்டுமன்னார்கோயில் (தனி):

மொத்தம் 1,81,996. 
ஆண்கள் 94,158, 
பெண்கள் 87,838. 



                மேற்காணும் வாக்காளர் பட்டியல், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்கள் தங்கள் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior