கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் 4, 5 தேதிகளில் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் 4-4-2011, மற்றும் 5-4-2011 ஆகிய இரு தேதிகளில் வாக்கு நிலை அலுவலர்களால் பொதுமக்களுக்கு வாக்காளர் சீட்டு வீடு வீடாக வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 9 தொகுதிகளுக்கும் வாக்காளர் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்காணும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம்.
கடலூர் 04142- 295189,
பண்ருட்டி 04142- 242174,
சிதம்பரம் 04144- 222322,
காட்டுமன்னார்கோவில் 04144- 262053,
விருத்தாசலம் 04143- 238289,
திட்டக்குடி 04143- 255240,
குறிஞ்சிப்பாடி 04142- 258901.
வாக்காளர் சீட்டை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். வாக்காளர் வசதிக்காக இது வழங்கப்படுகிறது. வாக்காளர் சீட்டைப் பெற்றுக் கொண்டு ஒப்புகை அளிக்க வேண்டும். வாக்காளர் சீட்டில் தவறுகள் இருந்தால் மேற்கண்ட வட்டாட்சியர் அலவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். வாக்காளர் சீட்டில் தேர்தல் நடத்தும் அலுவலரின் நகல் கையொப்பம் இடம்பெற்று இருக் கும்.
வாக்காளர் சீட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட 2 தினங்களில் வழங்கப்பட்டுவிடும். சீட்டைப் பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக வாக்காளர் பட்டிலில் உள்ள குடும்ப நபர் ஒருவர், வாக்காளர் பட்டியலில் கையெழுத்திட வேண்டும். 2 நாள்களில் விநியோகிக்கப்படாத மீதம் உள்ள வாக்காளர் சீட்டுகள், தாலுகா அலுவலகங்களில் ஒப்படைக்கப்படும்.
வாக்காளர் சீட்டு விநியோகிக்கும்போது வாக்குச் சாவடி அலுவலர்கள், அரசியல்வாதிகளையோ உள்ளாட்சிப் பிரதிநிகளையோ உடன் அழைத்துச் செல்லக் கூடாது. தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக உரிய பதில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக