உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 02, 2011

குறிஞ்சிப்பாடி நெசவாளர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: சொரத்தூர் ராஜேந்திரன்

நெய்வேலி:

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடித் தொகுதியில் உள்ள நெசவாளர்களின் பிரச்னை தீர நிரந்தரத் திட்டம் உருவாக்கப்படும் என குறிஞ்சிப்பாடித் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் கூறினார்.  

                 கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன், தொகுதிக்குட்பட்ட விருப்பாட்சி, பெத்தநாயக்கன்குப்பம், தம்பிப்பேட்டை, கஞ்சமாநாதன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.  அப்போது குறிஞ்சிப்பாடியில் உள்ள நெசவாளர்கள் நெய்யும் ஆடைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிட்டியது. ஆனால் நெசவாளர்களின் தேவையறிந்து செயல்படக் கூடிய மக்கள் பிரதிநிதி இல்லாததால், இப்பகுதி நெசவாளர்கள், மிகவும் நலிவடைந்துள்ளனர்.  

              நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று வேறுதொழில் தெரியாமல், அல்லல்பட்டு வருகின்றனர். மேலும் இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் யாரும் செயல்படவில்லை.  எனவே இப்பகுதி நெசவாளர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட பாடுபடுவேன் எனவும், அதற்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior