உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 27, 2011

கடலூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ரூ.1400 கோடி கடன்

திட்டக்குடி:
 
            திட்டக்குடி, ராமநத்தம் இந்தியன் வங்கி கிளைகளில் சிறப்பு கடன் வசூல் முகாம் நடந்தது. முகாமிற்கு திட்டக்குடி வங்கி மேலாளர் அனில்குமார் தலைமை தாங்கினார். 
 
            முதுநிலை மேலாளர் ராமச்சந்திரன், மண்டல அலுவல் அதிகாரி சுந்தர், ராமநத்தம் வங்கி கிளை மேலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி மேலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.   மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் இதில் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டித்தொகையை தள்ளுபடி செய்து பேசினார்

அப்போது மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் கூறியது:-

            கடலூர் மாவட்டத்தில் மட்டும் முன்னோடி வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர், கார், உழவு எந்திரங்கள் வாங்கவும், பாசன வசதிகள் பெறவும், ஆழ்துளை கிணறு அமைக்கவும், சுயதொழில் மற்றும் கல்வி கடனாகவும் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம்.   வரா கடன் வசூல் என திட்டமிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 43 கிளைகளில் 10 சிறப்பு முகாம்கள் நடத்தி கடனை வசூலித்து வருகிறோம். இதில் வாடிக்கையாளர்கள் எளிதாக கடனை திருப்பி செலுத்தும் வகையில் வட்டியில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்து கடனை வசூல் செய்து வருகிறோம்,

                இதனால் விவசாயிகள், சுயதொழில் தொடங்கியவர்கள் தங்கள் கடனை திருப்பி செலுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சேமிக்க உதவும். சிறப்பு கடன் வசூல் முகாம் மூலம் இதுவரை ரூ.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.  வங்கியில் வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிராமங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகவர்கள் மூலம் சம்மந்தப்பட்ட கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் அவரவர்வங்கி கணக்கில் இருந்து ரூ 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கவும், பணம் கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                 இதனால் பணம் எடுக்க சேமிக்க வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் அவர்கள் வீட்டிலேயே பணம் எடுக்கவும் சேமிக்கவும் முடியும். இவ்வாறு மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் பேசினார். 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior