உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 27, 2011

அடிப்படை வசதிகளை செய்து தர முன்னுரிமை : நெய்வேலி எம்.எல்.ஏ., எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன்


அடிப்படை வசதிகளை செய்து தர முன்னுரிமை கொடுத்து பாடுபடுவேன்: 

 சிவசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பேச்சு
கடலூர்:

             கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சொரத்தூர், கீழக்குப்பம், நடுக்குப்பம், வல்லம், மானடிகுப்பம், பேர்பெரியாங்குப்பம் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதன்பின் தனது சொந்த கிராமமான முத்தாண்டிக்குப்பத்தில் சிவசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 
அப்போது எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ. பேசியது:-

                  முதல்- அமைச்சர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த கால தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட மின்தடை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி போன்ற காரணங்களுக்கு தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பினார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது அசைக்க முடியாத நம்பிக்கையால் ஆட்சி பீடத்தில் உட்கார வைத்தார்கள். விவசாய குடும்பத்தில் பிறந்த சாதாரணமான என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்ப்பவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கியவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா. மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.2 1/2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் வழங்க உத்தரவிட்டவர் முதல்- அமைச்சர். தமிழ்நாட்டில் அதர்மத்தை அழிக்க வந்த தாயாக செயல்பட்டு வருபவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா. தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் அகல பாதாள பள்ளத்தில் விழுந்தவர்கள் எழுந்திருக்க முடியாத அளவுக்கு வாக்காளர்கள் ஓட்டு மூலம் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

              எந்த பிரச்சினையாக இருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். அதை தீர்த்து வைக்க பாடுபடுவேன். எதிர் வரும் காலம் நல்ல காலமாகவும், பொற்காலமாகவும் அமையும். அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்து தருவேன். பல்வேறு தடைகளை மீறி வாக்காளித்து வெற்றிப்பெற செய்த வாக்காளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ. பேசினார்.
                 நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் வக்கீல் ராஜசேகர், நிர்வாகி அனந்தராமன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பழனி, தொகுதி இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், வக்கீல் சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior