உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 11, 2011

பிளஸ் 1 பயில அரசு உதவித் தொகை

கடலூர்:

            அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் பயில, உதவித் தொகை பெறுவதற்கு அணுகலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வி.அமுதவல்லி அறிவித்து உள்ளார். 

ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இச்சலுகையைப் பெறலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 2 மாணவர்கள், 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவர்கள் இச்சலுகையைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

                    தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் தமிழகத்தில் தலைசிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயில நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவிபெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு, ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் 2 ஆண்டுகளுக்கு, மொத்தம் ரூ.56 ஆயிரம் நிதிஉதவி அளிக்கப்படும். தகுதி உள்ள மாணவ மாணவியர் கடலூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது



.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior