கடலூர்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென்று நிலை தடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் ஓடிவந்தனர். பஸ் கண்ணாடிகளை உடைத்து பஸ்சுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். தகவல் அறிந்து புதுசத்திரம் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். பஸ்சில் தீப்பிடித்து பெரிய விபத்து ஏற்படாமல் இருக்க பஸ் மீது தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த விபத்தில் காரைக்கால் சாத்துபடுகையை சேர்ந்த டிரைவர் மோகன், சீர்காழியை சேர்ந்த மாற்று டிரைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 42 பேர் காயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த டிரைவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்த மற்ற பயணிகள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக