கடலூர் :
கடலூரில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையெட்டி கடலூரில் நேற்று பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
உலகம் முழுவதும் மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையெட்டி கடலூர் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் சங்கம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது. இதில் புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறிப்புகள் அடங்கிய விளக்கப் படங்கள் அடங்கிய கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இக் கண்காட்சியை மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா திறந்து வைத்தார்.
மேலும் சிகரெட் புகைப்பதன் மூலம் அதில் உள்ள 48 வகையான விஷ பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. மற்றும் ஹைட்ரஜன் சயனைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, நிக்கோடின், கார்ப்பன் மோனாக்ஸைடு, அம்மோனியம் பென்சின், நேப்தலீன், அமினோ பை பினைல் போன்ற கொடிய விஷங்கள் சிகரெட்டில் உள்ளது என எச்சரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சங்கத்தின் தொண்டர்கள் வினியோகம் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக