கடலூரில் வியாழக்கிழமை நடந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஊர்வலம்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தினர் கடலூரில் வியாழக்கிழமை ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ஆறுகளில் மணல் எடுப்பது தொடர்பாக மாவட்டம் முழுவதும் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை, நிபந்தனையின்றி வாபஸ்பெற வேண்டும். மாட்டு வண்டித் தொழிலாளர் ஒருவரை தாக்கிய, கடலூர் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவந்திபுரம், சி.என்.பாளையம், திருக்கண்டேஸ்வரம். பலாப்பட்டு பகுதிகளில் அதிகாரப் பூர்வமான மணல் குவாரிகளை அமைக்க வேண்டும், மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளுக்காக இந்த ஊர்வலம் நடந்தது.
திருப்பாபுலியூர் உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாட்டுவண்டித் தொழிலாளர் சங்க கடலூர் நகரச் செயலாளர் பி.பரணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏ.ரங்கநாதன், ஜெய்சங்கர், சுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், துணைத் தலைவர் ஆளவந்தார், மாட்டுவண்டித் தொழிலாளர் சங்க சிறப்புத் தலைவர் ஆர்.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் ஆர்.என்.சுப்பிரமணியன், செயலாளர் வி.திருமுருகன், பொருளாளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக