உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 10, 2011

திட்டக்குடியில் திருடர்களை பிடிக்க இளைஞர் குழு

திட்டக்குடி:

               திட்டக்குடி பகுதியில் சிறு, சிறு, திருட்டுகள் நடந்தன. கடலு£ர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன் பேரில் திட்டக்குடியை அடுத்துள்ள புத்தேரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

               கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், அரியபுத்திரன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் ஜெயராமன், பூமாலை, சம்பத்குமார், பாலகிருஷ்ணன், பூவராகன், லெட்சுமி, செல்வாம்பாள் உட்பட பலர் பேசினர்.
 
           கூட்டத்தில் சட்டம் ஓழுங்கை பராமரிக்கவும், இரவு வேளைகளில் கதவுகளை திறந்து வைத்து படுத்து தூ ங்குவதை தவிர்க்கவும், கிராமங்களில் இளைஞர் குழுக்கள் அமைத்து இரவில் ரோந்து பணி மேற்கொள்ளவும் அடையாளம் தெரியாத நபர்கள் தென்பட்டால் காவல் துறைக்கு தகவல் தரவும், சாராய விற்பனை, சமுக விரோத செயல்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தந்து கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. 
 
                   இதே போல் மருவத்தூரில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். ஜெயராமன், செல்வராஜி உட்பட பலர் பேசினர். சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், அரியபுத்திரன், முருகேசன் ஆகியோர் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறித்து பேசினர். இந்த கூட்டத்திலும் கிராம மக்கள் காவல் துறையுடன் ஒத்துழைப்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior