உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 10, 2011

கடலூர் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா: நடிகை சினேகா பங்கேற்பு

கடலூர்:
             

             கடலூர் லாரன்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி நகைக்கடை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கடையின் முன்பு வாழை, கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.
               விழாவில் நடிகை சினேகா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டதால் அவரை காண நகைக் கடையின் முன்பு ஏராளமான ரசிகர்களும், பொது மக்களும் திரண்டு நின்றனர். காலை 11.50 மணிக்கு நடிகை சினேகா அங்கு வந்தார். அவரை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் மண்டல மேலாளர் கிரேஷியஸ், கிளை மேலாளர் பிரின்ஸ்பாபு, உதவி மேலாளர் ஜோமன் மற்றும் ஊழியர்கள் சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர்.

              அப்போது கடையின் முன்பு திரண்டு நின்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களை பார்த்து சினேகா கையசைத்தார். பதிலுக்கு ரசிகர்களும் கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நடிகையை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸ் காரர்களும் மற்றும் கடை காவலர்களும் நடிகை சினேகாவை பாதுகாப்பாக கடைக்குள் அழைத்துச்சென்றனர்.

                பின்னர் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. நடிகை சினேகா குத்து விளக்கேற்றியும், கேக் வெட்டியும் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகைக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளின் குறிப்பிட்ட டிசைன்களை எடுத்து அவர் தனது கழுத்தில் அணிந்து வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார். அப்போது அங்கே நின்ற வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருந்த செல்போனில் சினேகாவை படம் பிடித்தனர்.

             சுமார் 1 மணிநேரம் கடையை சுற்றிப்பார்த்து விட்டு நடிகை சினேகா அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா குறித்து கிளை மேலாளர் பிரின்ஸ் பாபு கூறும்போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல்தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. கேரளத்தில் 916 தர நகைகளை அறிமுகப்படுத்திய ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி மேலும் பல புதிய டிசைன்களை பொது மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் எங்களுக்கு சிறப்பான ஆதரவைத் தந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior