உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 10, 2011

புறம்போக்கு நிலங்களில் மரம் வெட்டினால் கடும் நடவடிக்கை: கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்

திட்டக்குடி:
 
           கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் திட்டக்குடி வந்தார். அவர் தாலுகா அலுவலகத்தில் பட்டாமாற்றம், நிலம், வீட்டுமனை அளவீடு, இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

               இதில் தாசில்தார் சையத்ஜாபர், சமூக பாதுகாப்பு தாசில்தார் கண்ணன், நிலஅளவைத் துறை வட்ட ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட சார் ஆய்வாளர் விநாயகம், வட்ட வழங்கல் அலுவலர் சொக்கலிங்கம், துணை தாசில்தார்கள் ராஜா, ராமமூர்த்தி, பால்ராஜ், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில், விருத்தகிரி, அசேன், நித்தியானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு பின் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கூறியது:-
 

              முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை உட்பட 8 இனங்களில் திட்டக்குடி தாலுக்காவில் மட்டும் 6 ஆயிரத்து 713 பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. ஜமாபந்தியில் பெறப் படும் மனுக்களில் பட்டா மாற்றம்குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும், முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்போருக்கு தகுதியின் அடிப்படையில் உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

             குறிப்பாக ரேஷன் கார்டுகளில் பெயர், வயது தவறாக இருக்கும் போது வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 3 மாத காலகெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை வெட்டினாலும், மணல் கடத்தல் செய்வோர் மீதும் நடவடிக்கை கடுமையாக இருக்கும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior