உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 24, 2011

பண்ருட்டி நகர பகுதியில் வீதிகளில் குப்பைகள்

ண்ருட்டி:

      பண்ருட்டி நகர நிர்வாகம் நகர பகுதியில் குப்பைகளை அகற்றாததால் நகரத்தில் உள்ள 33 வார்டு வீதிகளில் எங்கும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

           பண்ருட்டி நகராட்சியின் 33 வார்டுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 17 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைகளை கொட்ட உரிய இடத்தை நகர மற்றும் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து தராததால் கடந்த பல ஆண்டுகளாக நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் புகழ்பெற்ற கெடில நதியில் கொட்டியும், பள்ளம் தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சுற்றுசூழல் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

           இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நகரப் பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை. நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 110-க்கும் மேற்பட்டோர் இருந்து, நகரப் பகுதியில் குப்பை அள்ளுதல், கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட எந்த பணியியும் பெயரளவில் கூட நடைபெறவில்லை. இதனால் நகரப் பகுதியின் வீதிகள், பள்ளிகள், அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனை என எங்கு பார்த்தாலும் குப்பைகள் காற்றில் பறந்துக் கொண்டுள்ளது. 

          மேலும் சில இடத்தில் தேங்கிய குப்பைகளை நகராட்சிப் பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் இடத்தில் இருந்து பல்வேறு புகார்கள் மனுக்கள் வந்த போதும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 

இது குறிதது நகராட்சி அலுவலக ஊழியர்கள் கூறியது 

             நகரப் பகுதியில் குப்பைகள் அள்ளுவதற்கு 8 வாகனங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் பராமரிப்பு என தீர்மானம் நிறைவேற்றி பணம் எடுத்ததுடன் சரி வாகனத்தை பழுது பார்க்கவோ, பராமரிக்கவோ இல்லை. இதனால் வாகனங்கள் மிகமோசமான நிலையில் ஓடாமல் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய ஓரிரு வாகனம் மட்டும் இயங்குவதால் 33 வார்டு பகுதியிலும் குப்பைகள் அகற்ற முடியவில்லை என கூறினர். பண்ருட்டி நகர நிர்வாகம் சீர்கெட்டு பொது மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் வசதிகளை நிறைவேற்றவில்லை.

            து குறித்து நகர மற்றும் மாவட்ட அதிகாரிகளும் கவலைப்படவில்லை என்பதே உண்மை. பண்ருட்டி நகர நிர்வாகம் புத்துயிர் பெற அதிகாரிகள் முன்வருவார்களா?





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior