உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 24, 2011

கடலூர் மாவட்டத்தில் அரசு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

        மாணவர்கள் நடப்பாண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற அரசால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: 

           தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்துவ, முஸ்லிம், பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களைச்சார்ந்த அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11, 12ம் வகுப்பு மற்றும் வாழ்க்கை தொழில் கல்வி ஐ.டி.ஐ, ஐ.டி.சி., பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், ஆசிரியர் தொழில் பட்டயப்பயிற்சி, இளங்கலை மற்றும் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை நடப்பாண்டிற்கு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

           எனவே மேற்படி பயிற்சி தரும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிறுவனங்களில் பயிலும் தகுதியான சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெறுவதற்கு முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எந்த கல்வி உதவித்தொகையும் பெற்றிருத்தல் கூடாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior