உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 21, 2011

குடிசைத் தொழிலாக பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு: கடலூர் முதுநகரில் சுயத் தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள்




 http://img.dinamalar.com/data/albums/large/216114dffbb1c9e835.jpg






கடலூர் முதுநகர் :

           கடலூர் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழிலாக பித்தளை பாத்திரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

          பல ஆண்டுகளுக்கு முன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்த பித்தளை பாத்திரங்கள் தற்போது இந்த விஞ்ஞான யுகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது என்னவே உண்மைதான். ஆனாலும், கிராமப்புறங்களில் இன்னும் மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது. நகர்புறத்தில் திருமண சீர் வரிசை என்றலே பூஜை சமான்களைத் தவிர பிற பொருட்கள் அனைத்தும் எவர் சில்வர்களால் ஆன பாத்திரங்கள் கொடுக்கப்படுகிறது. 

         ஆனால் கிராமப்புறங்களில் இன்னமும் அதிக இடத்தை பிடிப்பது பித்தளை பாத்திரங்கள் தான். அதனால்தான் பித்தளை பாத்திரங்கள் செய்யும் தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் இன்னமும் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். கும்பகோணத்தில் முன்பு அதிகளவில் நடந்து வந்த இத்தொழில் தற்போது நலிவடைந்ததன் காரணமாக அங்கிருந்து தொழிலாளர்கள் பெரும்பாலானோர் கடலூரில் பணியாற்றுகின்றனர். கடலூர் முதுநகர், கண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவிலான தொழிலாளர்கள் பித்தளையிலான குடங்கள், தவலைகள், அண்டா, குண்டான் உள்ளிட்ட பல பொருட்களை செய்து வருகின்றனர். 

         பித்தளை பொருட்கள் செய்வதற்காக மூலப்பொருளான பித்தளை தகடுகளை முதுநகர் பகுதியில் கிடைக்கின்றன. இந்த தகடுகள் ஒரு கிலோ 350 ரூபாய்க்கு வாங்கப்படுகின்றது. பாத்திரங்களாக மாற்றப்பட்டு கடையில் கிலோ ஒன்று 450லிருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு கிலோ பித்தளை பொருட்கள் செய்ய தொழிலாளருக்கு 50 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இங்கு செய்யப்படும் பாத்திரங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. போதுமான ஆட்கள் இன்றி தேவைக்கேற்ப பாத்திரங்களை செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது. 

         இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தினமும் 400 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. பித்தளை பொருட்கள் செய்யும் பட்டறையை தொடங்க 60 ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது என இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior