உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 21, 2011

பண்ருட்டியில் பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும் அவியனூர் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

பண்ருட்டி : 

          பண்ருட்டி அடுத்த அவியனூர் ஆரம்ப துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. 

             பண்ருட்டி அடுத்த அவியனூர் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கடந்த 1994ம் ஆண்டு டேனிடா உதவியுடன் கட்டப்பட்டது. கடந்த 2000 - 2001ம் ஆண்டு கட்டடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக வாரம் தோறும் புதன் கிழமை மட்டும் செவிலியர் ஒருவர் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக அவரும் வருவதில்லை. தற்போது இந்த கட்டடத்தின் அருகில் கால்நடைகள் கட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. 

       இதனை சீரமைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க பொதுமக்கள் தரப்பில் பல முறை புகார் தெரிவித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவியனூர், பைத்தாம்பாடி, கரும்பூர், ரெட்டிச்சாவடி, காவனூர், சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து துணை சுகாதார நிலையம் செயல்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior