ஸ்ரீ சிறைமீட்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவை காணத் திரண்ட பக்தர்கள்.
சிதம்பரம்:
சிதம்பரம் மேலவீதியில் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுóள்ள ஸ்ரீசிறைமீட்ட விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு வெகு சிறப்பாக நடபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று வழிப்பட்டனர்.
முன்னொரு காலத்தில் சகரபுத்திரர்கள் அறுபத்தினாயிரவர்க்கும் அவர்கள் செய்த தவறுக்காக சாபம் தந்தார் கபில முனிவர். அதனால் அவரையும் பாவ வினைப் பற்றி வருத்தியது. இப்பாவம் நீங்கிட கபில முனிவர் சிறை மீட்ட விநாயகரை வணங்கிப் போற்றினார். விநாயகப் பெருமான் அருளால் அவரைப் பாவவினை பற்றாமல் நீங்கிற்று என வரலாறு கூறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தில்லைவாழ் அந்தனர்கள் என அழைக்கப்படும் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களால் சனிக்கிழமை காலை விக்னேஸ்வரபூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு தி.குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் கும்பத்துக்கு கலசநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.
இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிப்பட்டனர். விழாவை முன்னிட்டு அ.அறிவொளி எழுதிய விநாயகர் அகவல் வடமொழி மந்திர விளக்கம் என்ற நூல் வெளியிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நூலை வெளியிட முதல் பிரதியை கே.வி.பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், கே.வி.பார்த்தசாரதி, எஸ்.சூரியநாராயணன், எம்.சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக