சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
சிதம்பரம்:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூலை 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை 14-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இதில் மொத்தம் ரூ. 6 லட்சத்து 16 ஆயிரத்து 462 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி நடராஜர் கோயிலை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தி நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இப்போது செவ்வாய்க்கிழமை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர். ஜகந்நாதன், செயல் அலுவலர் க. சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் 14-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அறிநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 9 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 6 லட்சத்து 16 ஆயிரத்து 462 ரூபாய் கிடைத்தது.
மேலும் உண்டியலில்
11 கிராம் தங்கம்,
108 கிராம் வெள்ளி,
மலேசிய ரிங்கட் - 482,
சிங்கப்பூர் டாலர் 60,
அமெரிக்க டாலர் 4,
தென் ஆப்பிரிக்க ரிங்கட் - 10 ஆகியவை இருந்தன.
உண்டியல் வைக்கப்பட்டு 2 வருடம் 5 மாதத்தில் இதுவரை 14 முறை உண்டியல் எண்ணப்பட்டுள்ளது என்றும் இதில் மொத்தம் ரூ. 58 லட்சத்து 10 ஆயிரத்து 852 ரூபாய் கிடைத்துள்ளது எனவும் செயல் அலுவலர் க. சிவக்குமார் தெரிவித்தார்.
ஒரே கட்டாக ரூ. 50 ஆயிரம்:
நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்ட போது கொடிமரத்தின் அருகில் இருந்த உண்டியலில் ஒரு பக்தர் ரூ. 50 ஆயிரம் தொகையை ரூ. 500 நோட்டுகள் கொண்ட ஒரே கட்டாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக