உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 20, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பு: தொழிலாளர்கள் போராட்டம்


கடலூர்:

          கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பைக் கண்டித்து, தொழிலாளர்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

            இத்தொழிற்சாலையில் பென்ஸிலின்- ஜி என்ற மருந்து தயாரிக்கப்பட்டு, உலக நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பென்ஸிலின்- ஜி தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை ஸ்பிக் மட்டுமே. இத்தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 160 பேரும், மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். தொழிற்சாலையில் ஓராண்டுக்கும் மேலாக உற்பத்தி நடைபெறவில்லை. குறைந்த தொழிலாளர்களுடன் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடந்து வந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 100 பேருக்கு, ஆள்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

              மேலும் தொழிற்சாலையின் பிரதான கேட் மூடப்பட்டு உள்ளது. ஆள்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதை எதிர்த்தும், கேட் மூடப்பட்டதைக் கண்டித்தும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை, தொழிற்சாலை முன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நிர்வாகத்துடன் தாசில்தார் அசோகன், துணைத் தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் தங்கராஜ், தொழிலாளர் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்."

            ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும், தொழிற்சாலை கேட்டை திறக்க வேண்டும், இந்தியாவில் பென்ஸிலின்- ஜி தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை இதுவாக இருப்பதால், தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பு: தொழிலாளர்கள் போராட்டம் வீடியோ காட்சி
















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior