உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 20, 2011

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

நெல்லிக்குப்பம்:
 
          திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில்  உதவி ஆணையர் ஜெகநாதன், கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் வெங்கடேசன், கண்காணிப்பாளர் மாசிலாமணி, மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் உண்டியலை பிரித்து கொட்டினார்கள்.

           இந்த உண்டியலில் இருந்த பவுன், வெள்ளி, ரூபாய்நோட்டு, சில்லரை காசுகள், வெளிநட்டு கரன்சி என தனியாக பிரித்து எடுத்தனர். தங்கம் 95 கிராமும், வெள்ளி 43 கிராமும் காணிக்கை செலுத்தி இருந்தனர். ரூ.5 லட்சத்து 53 ஆயிரத்து 956, பக்தர்களின் காணிக்கை மூலம் கிடைத்தது. மேலும் வெளிநாட்டினர் இங்கிலாந்து கரன்சி நோட்டு 2-ம், மலேசியா கரன்சி 2-ம், சிங்கப்பூர் கரன்சி 1-ம் காணிக்கையாக செலுத்தி இருந்தார்கள். இந்த உண்டியல் எண்ணும் பணியில் சுமார் 40 பேர் ஈடுபட்டிருந்தனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்தது அதாவது 3 மணிநேரம் இப்பணி நடைபெற்றது
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior