திருவள்ளூர் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில், உலக மக்கள் தொகை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு சுகாதார பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) உஸ்மான் அலி தலைமை வகித்தார். ஊரக நலப்பணி, குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் சேகர் வரவேற்றார். விழாவில், கைத்தறித்துறை அமைச்சர் ரமணா கலந்துகொண்டார். பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசும்போது, ‘
’மக்களை ஈர்க்கும் விளம்பரங்கள்தான் தற்போது அவர்களிடம் சென்றடைகிறது. எனவே, குடும்ப கட்டுப்பாடு குறித்து மக்களை ஈர்க்கும் விளம்பரங்களை செய்து, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகை பெருகி வருவதால்தான் பொருளாதார நிலைமை பாதிக்கப்படுகிறது. எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரம் அவசியமாகிறது. ஆண்களுக்கான கருத்தடை அவசியம் குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும்.
குடும்ப கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பரிசளிப்பு விழாக்களுக்கு அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும்’’ என்று பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக