சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே வேளங்கிராயன்பேட்டை பகுதியில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை முதல் ஜூலை 15-ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என அப்பகுதி மீனவர்கள் முடிவு செய்து புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பரங்கிப்பேட்டை அருகே வேளங்கிராயன்பேட்டை பகுதியில் ரூ. 300 கோடி செலவில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க வேளங்கிராயன்பேட்டை, அண்ணன்பேட்டை, புதுக்குப்பம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் வாங்கியுள்ளனர். வருகிற ஜூலை 14-ம் தேதி கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பது குறித்து மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வேளங்கிராயன்பேட்டை பகுதி மீனவர்கள் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராமத் தலைவர் ஏழுமலை தலைமையில் திங்கள்கிழமை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் ஜூலை 15-ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். இதனால் திங்கள்கிழமை அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாம் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக