கடலூர்:
கடலூர் மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் செயல்படும் பார்களுக்கு, செவ்வாய்க்கிழமை ஏலம் நடைபெற்றது. கடலூர் மாட்டத்தில் 231 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.
இவற்றுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன. விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகத்தில் வைத்து, டெண்டர்கள் பிரிக்கப்பட்டன. டாஸ்மாக் கிளை மேலாளர் காசி முன்னிலையில் டெண்டர்கள் பிரிக்கப்பட்டன.
பார்களை நடத்த அதிகத் தொகை கோரியிருந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 231 டாஸ்மாக மதுக்கடைகளிலும் பார் நடத்த டெண்டர் கோரப்பட்டு இருந்த போதிலும், 190 விண்ணப்பங்கள் மட்டுமே வந்து இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 231 கடைகளில் 40 முதல் 50 கடைகளில் மட்டுமே பார் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தக் கடைகளுக்கு மட்டுமே விண்ணப்பங்களை அளித்து இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக