சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இம்முகாமில், ஹெச்.சி.எல்., நாகார்ஜுனா ஆயில் கார்பரேஷன், ஐ.எஃப்.எஸ்.எல். லிமிடெட், டெக்னோபீஸ் கார்பரேஷன், இ.டி.ஏ. லிமிடெட், சீனாவைச் சேர்ந்த ஃபோகவுன் இன்டர்நேஷனல், சிங்கப்பூரைச் சேர்ந்த ரோட்டரி என்ஜினீயரிங், மலேசியாவைச் சேர்ந்த விகோசி நிறுவனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று திறமையான மாணவ, மாணவியர்களை தங்களது நிறுவனத்தில் பணிபுரிவதற்காக தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கியது.
தேர்வு செய்யப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக மாத சம்பளமாக ரூ. 30 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 74 ஆயிரம் வரை வழங்கப்படும். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன் ஆகியோர் வழிகாட்டுதல் மற்றும் முயற்சியில் பேரில் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு பல்கலைக்கழகம் தொடர் சாதனையை பெற்றுள்ளது.
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தியா முழுவதிலிருமிருந்து பல்வேறு துறையின் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் அனைவருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது, மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது என பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறை தலைவர் முனைவர் கே.ரகுகாந்தன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக