நெய்வேலி:
நெய்வேலி அருகே வானதிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கனிதா (வயது 10). இவர் வடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி பள்ளிக்கு சென்ற கனிதா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கனிதா இல்லை.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி தென்குத்து கிராமத்தில் ராஜா என்ப வரது வீட்டின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தலை இல்லாமல் கனிதாவின் உடல் மிதந்தது. இதையடுத்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சியால் கனிதாவின் தலையும் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய கனிதாவை பிணம் கிடந்த கிணற்றின் உரிமையாளரான ராஜாவின் மைத்துனர் அய்யனார் (வயது 25) என்பவர் கனிதாவை சைக்கிளில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. ஆனால் கனிதா மாயமான நாள் முதல் அய்யனாரும் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கண்ணு தோப்பு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு பஸ்சுக்காக காத்திருந்த அய்யனாரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கனிதாவை கழுத்தை நெறித்து கொன்று கிணற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார்.
கனிதாவை கொன்றது ஏன் என்பது குறித்து போலீசாரிடம் அய்யனார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது:-
சம்பவத்தன்று பள்ளி சென்றுவிட்டு திரும்பிய கனிதாவை தென்குத்துவில் உள்ள எனது அக்கா வீட்டுக்கு ஏமாற்றி அழைத்து சென்றேன். அங்கு கனிதாவை கற்பழிக்க முயற்சி செய்தேன். அப்போது அவள் உடன்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் கனிதாவை கழுத்தை நெறித்து கொலை செய்தேன். அந்த நேரத்தில் எனது தாய் சந்திரா பார்த்து சத்தம் போட்டார். பின்னர் எனது தாய் சந்திராவை சமாதானம் செய்தேன். அவரது உதவியுடன் கனிதாவின் பிணத்தை கிணற்றில் வீசினேன்.
மேலும் மாணவியின் உள்ளாடை காலணி ஆகியவற்றை எனது தாயார் மறைத்து வைத்தார். மேலும் வீட்டில் பதிந்திருந்த ரத்தக்கரையை கழுவி சுத்தம் செய்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த நான் வெளியூருக்கு தப்பி செல்ல பஸ்சுக்கு காத்திருந்த போது என்னை போலீசார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் அய்யனார் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து அய்யனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சந்திராவையும் கைது செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக