உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 02, 2011

விவசாயத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க மாணவர்கள் முன் வர வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

சிதம்பரம்:
 
               விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் தீங்கு ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடியை அழிக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் இணைந்து ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உழவியல் துறை தேசிய வேளாண் புதுமைத்திட்டத்தின் கீழ் பார்த்தீனியம்களை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. விழாவில் தமிழக சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப்பேசினார்.

அவர் பேசியது:-

                 கடந்த 2010-11-ல் தமிழகத்தில் 85 லட்சத்து 35 ஆயிரம் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-12-ல் அதன் பன்மடங்காக உயர்த்த 115 லட்சம் டன் உற்பத்தி குறீயீட்டை நிர்ணயம் செய்து அதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். அதனடிப்படையில் இந்த பார்த்தீனியம் செடி ஒழிப்பு திட்டமாகும். விவசாயத்தை பசுமை புரட்சியாக மாற்றியமைக்க முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தரமான விதை வழங்குதல், விவசாயத்திற்கு தேவையான கனரக மற்றம் நடுத்தர வாகனங்கள் வாங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தையும் அறிவித் துள்ளார்.

                கடலூர் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகள், 5 நகராட்சிகள், 16 பேரூ ராட்சிகள், 13 ஒன்றியங்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்த அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தரை கேட்டுக் கொள்கிறேன். பார்த்தீனியம் செடியை முழுமையாக அகற்ற அரசு வேளாண்துறை அதிகாரிகளும், நாங்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து நிற்போம் என உறுதி கூறுகிறேன்.

                பார்த்தீனியம் செடி ஒழிப்பில் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டம் முன்னோடியாக திகழ அண்ணாமலை பல்கலைக்கழகம் பணியாற்றி பெருமை  சேர்க்கும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் சிறப்புரையாற்றினார். துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கி பேசினார். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறைத்தலைவர் பேராசிரியர் கதிரேசன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அமுதவல்லி, எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், நாக.முருகுமாறன், கடலூர் மாவட்ட இணை இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோட்டக்கலைத்துறை தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

               விழாவில் வேளாண்புல முதல்வர் வசந்தகுமார், தொலைதூரக்கல்வி மைய இயக்குனர் நாகேஸ்வரராவ், சிண்டிகேட் உறுப்பினர்கள் சிவக்குமார், ராஜவன்னியன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior