உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 17, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல நிலை இசைப் படிப்புகள் தொடக்கம்

சிதம்பரம்:

              அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை சார்பில் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல நிலை இசைப் படிப்புகள் (லெவல் கோர்ஸ் இன் மியூசிக்) தொடங்கப்பட்டுள்ளதாக அதந் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தது:

            கனடா நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படும் இசைத்துறை படிப்புகளுக்கு அங்குள்ள மக்களிடம் நல்ல வரவேற்புள்ளது.

              நமது பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் சேர்ந்து பயில வேண்டுமென்றால் 8,10-ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை பட்டம் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய இசை, நாட்டிய மேதைகள் குறைந்த படிப்பு படித்துள்ளதால் தகுதி இருந்தும் பி.ஹெச்டி பயில இயலவில்லை. இதற்காக தற்போது பள்ளிகளில் பயிலும் 9 வயதிலிருந்து 18 வயது வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இசைத்துறையில் வாய்ப்பாடு, நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய படிப்புகளை பயில 8 லெவல்களில் லெவல் கோர்ஸ் இன் மியூசிக் என்ற படிப்பு மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த ஆண்டுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. 

               விருப்பம் உள்ள பள்ளிகள் இந்த படிப்பை நடத்த விரும்பினால் நடத்தலாம். இதற்கான வகுப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும். மேலும் தனியார் நாட்டியப் பள்ளிகள் மூலம் இந்த படிப்பை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்ஏஎம்.ராமசாமியின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 400 பக்கங்கள் கொண்ட சிறப்பு மலரை தயாரித்துள்ளது. அந்த மலர் விரைவில் வெளியிடப்படும் என ராமநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உடனிருந்தார்.











0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior