உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 17, 2011

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் என்ஜின் பழுது


என்ஜின் பழுது காரணமாக வெள்ளிக்கிழமை கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில்.
கடலூர்:

            என்ஜின் பழுது காரணமாக விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பொதுமக்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் அவதியுற்றனர்.

               விழுப்புரத்தில் இருந்து மாயவரம் செல்லும் பயணிகள் ரயில், வெள்ளிக்கிழமை காலை 6.40 மணிக்கு கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது திடீரென ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் என்ஜினைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. 

                இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், மாணவர்கள் உரிய நேரத்தில் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. மேலும் என்ஜின் பழுது காரணமாக, லாரன்ஸ் சாலையில் நீண்டநேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், அந்த வழியாகச் செல்வோர் பெரிதும் பாதிக்கப் பட்டனர். பொதுமக்கள் தகராறு செய்ததைத் தொடர்ந்து, ரயில்வே கேட்டை சிறிது நேரம் திறந்து பின்னர் மூடினர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior