உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 24, 2011

கடலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/db2cb794-bbe8-42ce-b30d-0247629ef49c_S_secvpf.gif
 
கடலூர்:

         கடலூர் அருகே உள்ள வானமாதேவி விலங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பாகூரில் உள்ள 4 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தனுசுக்கும் கடலூர் அருகே உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்த தேவிகா (21) என்ப வருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

            இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தேவிகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவவார்டில் உறவினர்கள் சேர்த்தனர். அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவிகாவுக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படாததால் அவருக்கு வார்டிலேயே தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

        தேவிகாவுக்கு மீண்டும் பிரசவவலி ஏற்பட்டத்தை அடுத்து அவரை உடனடியாக பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை சுகமாக பிறந்தது. இதை அடுத்து தேவிகாவையும், பெண் குழந்தையையும் வார்டுக்கு அழைத்து செல்லலாம் என்று இருந்தபோது, மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது.

               இதனால் தேவிகாவுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்து ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன.   ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை பிறந்ததை பார்த்து டாக்டர்களும், நர்சு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் சராசரி எடை(3கிலோ)- யை விட குறைவாக இருந்தன.

              ஒரு பெண் குழந்தை 2 கிலோ 400 கிராம் எடையும், இன்னொரு பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையும், ஆண் குழந்தை 1 கிலோ 600 கிராம் எடையும் இருந்தன. இதில் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள பெண் குழந்தை சிசு தீவிர சிகிச்சை கண்காணிப்பு பகுதியில் ‘இன்குபெட்டர்‘ கருவியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  3 குழந்தைகளும், தாயும், நல முடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்   இது குறித்து தனுஷ் கூறும்போது இது எனது மனைவிக்கு தலைப்பிரசவம். அவளுடைய வயிறு பெரிதாக இருந்ததால் 2 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து இருக்கிறது என தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior