உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 22, 2011

விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பிப்ரவரியில் தொடக்கம்

நெய்வேலி:

            விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என தங்க நாற்கரச் சாலைத் திட்ட அலுவலர் அதிபதி தெரிவித்தார். 

             விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் உள்ளது. இச்சாலை அண்மையில் பெய்த மழையால் மிகுந்த சேதமுற்று, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.  குறிப்பாக சேத்தியாத்தோப்பில் இருந்து விக்கிரவாண்டி வரை செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. தஞ்சை, கும்பகோணம், நாகை, சிதம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் பண்ருட்டி வரை தட்டுத்தடுமாறி வந்தாலும் பண்ருட்டிக்குப் பிறகு அரசூர் வழியாக விழுப்புரம் சென்று சென்னை செல்கின்றனர். பஸ்களும் அதே வழியில் தான் செல்கின்றன.  அந்த அளவிற்கு பண்ருட்டி-விக்கிரவாண்டி சாலை குண்டும் குழியமாக மாறி உள்ளது. பண்ருட்டி-விக்கிரவாண்டி இடையேயான 27 கி.மீ தூரத்தைக் கடக்க குறைந்தபட்சம் 2 மணி நேரமாகிறது.  

இந்நிலையில் சாலைப் பணிகள் செப்பணிடுதல் குறித்து தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் தஞ்சைக் கோட்ட திட்ட இயக்குநர் அதிபதி கூறுகையில், 

                      அண்மையில் பெய்த மழையால் சேதமுற்ற சாலைகளை செப்பனிட ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  மேலும் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் இச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் இப்போது துரித கதியில் நடைபெறுகிறது. ஒப்பந்தம் கோரும் பணி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான்குவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்படும்.  விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை மார்க்கத்தின் இடையே உள்ள பண்ருட்டி மற்றும் வடலூர் நகர்ப் பகுதிகளில் பைபாஸ் சாலை அமைக்கப்பட இருப்பதாவும் தெரிவித்தார். இதனால் வடலூர், பண்ருட்டி பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior