கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு கைதிறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் 'தலைப் பொங்கல் , இந்திய சேலைகள் திருவிழா' என்ற பெயரில் வெண்கலப் பானைகள் மற்றும் கைத்தறி சேலைகள் கண்காட்சியை சென்னையில் நடத்துகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கண்காட்சி அரங்கை தமிழக ஊரக, தொழில்துறை மற்றும் சத்துணவு அமைச்சரான எம்.சி.சம்பத் இன்று துவக்கி வைத்தார். வரும் பொங்கல் திருநாளில் புதுமணத் தம்பதிகள் புதுச் சேலையணிந்து புதிய வெண்கலப்பானையில் தலைப் பொங்கல் கொண்டாடுவதற்காக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சமாக பலவித அளவுகளில் வெண்கலப் பொங்கல் பானைகள் மற்றும் வெண்கலக் கரண்டிகள் போன்றவையும், மத்திய பிரதேசத்தின் சந்தேரி புடவைகள், மேற்கு வங்கத்தின் காந்தா புடவைகள்ர ஆந்திராவின் மங்களகிரி, கலம்காரி புடவகள், தமிழகத்தின் தாரமங்கல்ம், சேலம் பருத்திப் புடவைகள், மதுரை சுங்குடி புடவைகள் என அனைத்தும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று துவங்கிய இக்கண்காட்சி வரும் ஜனவரி 13-ம் தேதி வரை நடைபெறும்.
தகவலுக்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"