
கடலூர்:
சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் போட்டோ மற்றும் வீடியோ கிராபர்ஸின் பி அன்ட் வி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் முயல் பட பூஜை மற்றும் இசை குறுந்தகடு வெளியிட்டு விழா நடைபெற்றது.
இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் கலந்து கொண்டு இசை குறுந்தகடினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பட பூஜை ஸ்டூடியோவில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் செயலாளர் சிவா, தலைவர் ராமதுரை, சங்க மாநில தலைவர் மோகன்ராஜ், பொதுச்செயலாளர் பிரசன்னா, விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன், கலைமாமணி யோக ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதில் கடலூரை சேர்ந்த முத்து கலர் லேப் உரிமையாளர் முத்து, சிவக்குமார், கணேஷ், பழனிகுமார், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் கதாநாயகனாக புழல், கண்டுபிடி, கண்டுபிடி படத்தில் நடித்த முரளி, கதாநாயகியாக பேராண்மை படத்தில் நடித்த சரண்யா ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் ராஜ்குமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீராகிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சினி மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் திரைக்கதை மற்றும் வசனம் எஸ்.பி.எஸ். குகன் மேற்கொள்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக