உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 09, 2012

பரங்கிப்பேட்டையில் நாட்டிலேயே முதன்முதலாக சினை மீன் வங்கி திறப்பு

சிதம்பரம்:

         இந்தியாவிலேயே முதன்முதலாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் சினைமீன் வங்கி  வியாழக்கிழமை (பிப்.9) திறக்கப்படுகிறது.

          அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன் இனங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு கடல்வாழ் அறிவியல் புலமாக தொடங்கப்பட்டு பல்வேறு முதுகலைப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய மீன் அபிவிருத்தி வாரிய நிதியுதவியுடன் பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக தேசிய அளவிலான சினை மீன் வங்கி தொடங்கப்படுகிறது. 

         இதன் திறப்பு விழாவுக்கு துணை வேந்தர் எம்.ராமநாதன் தலைமை வகிக்கிறார். தேசிய மீன் அபிவிருத்தி வாரிய முதன்மை இயக்குநர் பி.கிருஷ்ணய்யா, சினை மீன் வங்கியை தொடங்கி வைக்கிறார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ முன்னிலை வகிக்கிறார். கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் முனைவர் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்கிறார். மத்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இயக்குநர் ஜே.ஆர்.பட், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழா ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியரும், மூத்த ஆராய்ச்சியாளருமான டி.டி.அஜீத்குமார் செய்துள்ளார்.











0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior