உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், பிப்ரவரி 09, 2012

:கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் இலவச பல் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம்

கடலூர் :

        கடலூர் அடுத்த எஸ்.குமராபுரத்தில் உள்ள கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் இலவச பல் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
 

     கல்லூரி என்.எஸ். எஸ்., சார்பில் நடந்த முகாமிற்கு கல்லூரியின் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். முதல்வர் ரமாமணி முன்னிலை வகித்தார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியின் இந்திரா காந்தி பல் மருத்துவ மையம் சார்பில் டாக்டர் செந்தில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கல்லூரி மாணவிகளின் பற்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் பல் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் ரேணுகா, செஞ்சுருள் சங்க அலுவலர் வள்ளி, இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் சங்கீதப்ரியா, பேராசிரியர் நிர்மலா உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior