உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், பிப்ரவரி 09, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் :

      விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

      விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை ஒழிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் கலாவதி, தனி தாசில்தார் காமராஜ் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மனோண்மணி வரவேற்றார். கல்லூரியில் தொடங்கிய ஊர்வலம் பாலக்கரை வழியாக ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை சென்றது. ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மதிவாணன், சிவக்குமார், ராஜசேகர், பாலசங்கு, உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior