உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 05, 2011

பரங்கிப்பேட்டையில் ஆதிமூலேஸ்வரர் கோவில் தேர்: அதிகாரி அலட்சியத்தால் பாழ்

பரங்கிப்பேட்டை : 

            பரங்கிப்பேட்டை அருகே ஆதிமூலேஸ்வரர் கோவிலில் சேதமடைந்த தேரை புனரமைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் அலட்சியத்தால் தேர் உருக்குலைந்து மக்கி மண்ணோடு மண்ணாகி வருகிறது. 

           பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில் பழமை வாய்ந்த அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமாக 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளது. நிலம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சூரிய பூஜை, மாசி மகத்தையொட்டி பத்து நாட்கள் திருவிழா, தை அமாவாசை, ஆடிப்பூர விழாக்கள் நடத்தப்படுகிறது.

            மாசிமக உற்சவத்தின் போது அமிர்தவல்லி மற்றும் ஆதிமூலேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக தேரோட்டம் நடப்பது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலில் இருந்த இரண்டு தேர்கள் சேதமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சேதமடைந்த தேரை சீர்செய்யக் கோரி அறநிலையத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

           அதன்பேரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேரை சீர் செய்ய 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கி நான்கு ஆண்டுகள் ஆகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அந்த நிதி தற்போது அரசுக்கு திரும்பிப்போகும் நிலை உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் சீர் செய்யப்பட வேண்டிய தேர் உருக்குலைந்து மண்ணோடு, மண்ணாக மக்கி வருகிறது.




Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

பரங்கிப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை: 

           பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத்துறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

            பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலை துறை சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சஞ்சீவிராயர் கோவில் தெருவில் இருந்து சின்னக்கடை வரை, பெரியக்கடை ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். 

                  சின்னக்கடை, சஞ்சீவிராயர் கோவில் தெரு ஆகிய இடங்களில் எதிர் எதிரே இரண்டு பஸ்கள் வந்து விட்டால் ஒதுங்கக்கூட இடமில் லாத நிலை ஏற்படுகிறது.  இதுபோன்ற நேரங்களில் அவசரத்திற்காக வரும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களின் நிலைமை படுமோசம். இதனால் அகரம் ரயிலடியில் இருந்து பரங்கிப்பேட்டை சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத் துறை சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

திங்கள், ஏப்ரல் 12, 2010

ரங்கநாதபுரத்தில் மீன் மார்க்கெட் : அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

 கடலூர் :

            ரங்கநாதபுரம் ஊராட்சியில் மீன் மார்க்கெட் கட்டித்தரப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
 
              குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட நாகம்மாபேட்டை, கோதண்டராமபுரம், அனுக்கம்பட்டு, அகரம், ஆயிக்குப்பம், ரங்கநாதபுரம், கண்ணாடி, விருப்பாட்சி, ஆடூர் அகரம் ஆகிய ஊராட்சிகளில் அமைச்சர் பன்னீர்செல்வம் பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.  இக் கிராமங்களில் இருந்து 2,631 மனுக்களை பெற்றார்.
 
             குறிப்பாக ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அரசவல்லிக்கு பட்டா வழங்கவும், அனுக்கம்பட்டு கிராமத்தில் மாற்றுத் திறனாளிகள் வினோத்குமார், விஸ்வா, பாலமுருகனுக்கு உடனடியாக பள்ளியில் படிக்கவும், ரங்கநாதபுரம் இந்துமதிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் உத்தரவிட்டார்.
 
பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில் 

            'தமிழக முதல்வர் மாற்று திறனாளிகளுக்கென துறையை உருவாக்கியவுடன் அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு நம்பிக்கையுடன் உள்ளனர். ரங்கநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த 21 பேர் தொகுப்பு வீடுகளை பழுது பார்த்து தரவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கி சரி செய்யப்படும். மேலும் மீன்மார்க்கெட் ஒன்றும் கட்டித்தரப்படும்' என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, பி.ஆர்.ஓ., முத்தையா பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

திங்கள், மார்ச் 29, 2010

சாலை விரிவாக்கம்: அதிகாரிகள் ஆய்வு

பரங்கிப்பேட்டை : 

                 பரங்கிப்பேட்டை அருகே சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார். பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் நெடுஞ்சாலையில் இரண்டு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணி கடந்த வாரம் முடிந்தது. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் ரயிலடி அருகே சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Read more »

வியாழன், மார்ச் 25, 2010

பரங்கிப்பேட்டையில் போக்குவரத்து நெரிசல்மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல கோரிக்கை


பரங்கிப்பேட்டை: 

              பரங்கிப்பேட்டை அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

                     சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், தனியார் அலுவலகங்கள் என மக்கள் புழக்கம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியில் எதிரேவரும் வாகனம் தெரியாத அளவிற்கு வளைவுகள் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் வாகனங்கள் அகரம் தேரோடும் வடக்குவீதி வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும். அதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படைவசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

பரங்கிப்பேட்டை: 

                    பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிள்ளை, தில்லைவிடங்கன், அகரம், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலங்கள் வாங்கவும், விற்கவும், அடமானம் வைக்கவும், பிறப்பு, இறப்பு சான்றுகள் வாங்கவும், திருமணம் பதிவு செய்துகொள்ளவும் என தினமும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அலுவலகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.

                            கடந்த 1887ம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. அதுமுதல் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, இருப்பிட வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் வயதான முதியோர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பிடவசதிகள் இல்லாததால் வயதான முதியோர்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்துகிடக்க வேண்டியுள்ளது.தினசரி அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படை வசதி செய்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior