பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத்துறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலை துறை சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சஞ்சீவிராயர் கோவில் தெருவில் இருந்து சின்னக்கடை வரை, பெரியக்கடை ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
சின்னக்கடை, சஞ்சீவிராயர் கோவில் தெரு ஆகிய இடங்களில் எதிர் எதிரே இரண்டு பஸ்கள் வந்து விட்டால் ஒதுங்கக்கூட இடமில் லாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் அவசரத்திற்காக வரும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களின் நிலைமை படுமோசம். இதனால் அகரம் ரயிலடியில் இருந்து பரங்கிப்பேட்டை சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத் துறை சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக