உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படைவசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

பரங்கிப்பேட்டை: 

                    பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிள்ளை, தில்லைவிடங்கன், அகரம், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலங்கள் வாங்கவும், விற்கவும், அடமானம் வைக்கவும், பிறப்பு, இறப்பு சான்றுகள் வாங்கவும், திருமணம் பதிவு செய்துகொள்ளவும் என தினமும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அலுவலகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.

                            கடந்த 1887ம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. அதுமுதல் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, இருப்பிட வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் வயதான முதியோர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பிடவசதிகள் இல்லாததால் வயதான முதியோர்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்துகிடக்க வேண்டியுள்ளது.தினசரி அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படை வசதி செய்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior