உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அறிவியல் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/2c3776f4-1da9-4020-a016-6dda6c8a2293_S_secvpf.gif
 
கடலூர்:
 
                 கடலூர் மஞ்சகுப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு புதுவை மாநில அறிவியல் இயக்க செயலாளர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். புனித வளனார் பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகளார் முன்னிலை வகித்தார்.

               கண்காட்சியை கடலூர் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் மீனாட்சி சுந்தரம், அரசு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இக்கண்காட்சியில் 400 மாணவர்கள் பங்கேற்று 200 அறிவியல் படைப்புகளை வெளிபடுத்தினார்கள். கண்காட்சியின் மையக்கருத்தாக உயிரின பல்வகை அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்த்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் துறை ஆசிரியர்கள் மரியசேவியர், ஜான்பீட்டர், வாசு ஆகியோர் செய்து இருந்தனர்.
 
 
 
 
 

Read more »

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரியில் வேதியியல் கண்காட்சி துவக்கம்

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் "உலக வேதியியல் ஆண்டு 2011' தலைப்பில் கண்காட்சி துவங்கியது. 

            வேதியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் வரவேற்றார். பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினர் சிவ சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். வேதியியல் துறைத் தலைவர் ஜெ. அனுசுயா துவக்க உரையாற்றினார்.

               இக்கண்காட்சியில் வேதியியல் சம்பந்தமான 50 படைப்புகள் இடம் பெற்றுள்ளன. விழாவில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட உள்ளனர். இறுதி நாளான்று சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இணைப் பேராசிரியர் அனுசுயா நன்றி கூறினார்.

Read more »

திங்கள், நவம்பர் 22, 2010

வடலூர் எஸ்.டி. ஈடன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குறிஞ்சிப்பாடி : 

               வடலூர் எஸ்.டி. ஈடன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. எஸ்.டி. ஈடன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த  அறிவியல் கண்காட்சியை பெத்தநாயக்கன்குப்பம் எஸ்.ஐ.எல். நிறுவன மேலாளர் ரவிக்குமார் திறந்து வைத்தார். 

                பள்ளியில் 5 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு அரங்கங் கள் அமைத்து இருந்தனர். இதில் பறக்கும் வானூர்தி, தொலைத் தொடர்பு சாதன மாதிரிகள், சோப்பால் செய்யப்பட்ட புத்தர், பிள்ளையார், ரோஜாப்பூக்கள், இடம் பெற்றிருந்தது. மேலும் சொட்டு நீர் பாசனம், ஓசோன் எவ் வாறு மாசுபடுதல், அனல் மின் நிலைய மாதிரி, வெடிக்கும் எரிமலை என மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. 

                கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்தப்பட்ட ஓவியப் போட்டி, கையெழுத்து போட்டி, கட்டுரை போட்டி, புதுக்கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பள்ளி முதல்வர் தாமஸ் பரிசுகளை வழங்கி பாராட் டினார்.

Read more »

வெள்ளி, அக்டோபர் 15, 2010

பண்ருட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பண்ருட்டி:

                பண்ருட்டி பூங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கண்காட்சியையொட்டி பள்ளி மாணவர்கள் தயாரித்த அறிவியல் தொடர்பான காட்சிப் பொருள்களை சக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் சிறப்பாக காட்சிப்பொருள் அமைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை வ.மல்லிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைமையாசிரியர் ஏ.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

வியாழன், அக்டோபர் 14, 2010

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

                   அண்ணாமலைப் பல்கலைக் கழக தாவரவியல் துறைத் தலைவர் ஆறுமுகம் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் தலைமை தாங்கினார். கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவ,மாணவிகள் காட்சிப் பொருளாக வைத்திருந்தனர். சிறப்பான காட்சிப் பொருளாக மூன்று கண்டுபிடிப்புகள் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Read more »

செவ்வாய், அக்டோபர் 12, 2010

கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் : 

             கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை தாங்கினார். 

                       பள்ளியின் செயலாளர் திருவடி துவக்கி வைத்தார். கண்காட்சியில் காற்று மற்றும் நீர் மாசுபடுத்தல் பற்றியும், இயற்கை உணவுகள் மற்றும் காய்கறிகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக விளக்கிக் கூறினர். மேலும் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு தலைப்பின் கீழ் செயற்கைக்கோள் இயக் கத்திற்கு ஏற்ப பூமியின் அன்றாட நிகழ்வுகள் நடப்பது குறித்து மாணவர்கள் விளக்கினர். மேலும் வீட்டில் திருட்டை தடுக்கும் வகையில் மதில் சுவரில் மின் இணைப்பு அலாரம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior