உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 20, 2012

நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி.க்கு தகுதி

நெய்வேலி :

ஐ.ஐ.டி.,க்கு தேர்வு பெற்ற நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்களை என்.எல்.சி., சேர்மன் பாராட்டி பரிசு வழங்கினார். நெய்வேலி தெலுங்கு சமிதியின் ஆதரவுடன் கடந்த 2005ம் ஆண்டு முதல்  என்.எல்.சி., கட்டுப்பாட்டில் செயல்படும் ஜவகர் சி.பி. எஸ்.இ., மேல்நிலைப்  பள்ளியில் ஐ.ஐ.டி., நிறுவனங்களில் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்  தேர்வுக்கு ஒருங்கிணைந்த முறையில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் டில்லி, விஜயவாடா, கோட்டா, ஐதராபாத் ஆகிய நகரங்களில்  ஐ.ஐ.டி.,நுழைவுத் தேர்வு பயிற்சிக்கான நிபுணர்கள் பயிற்சி வழங்குகின்றனர்.  ஆண்டுதோறும் இப்பள்ளியிலிருந்து 15 முதல் 20 மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் பயில இடம் பெறுகின்றனர். இந்த ஆண்டு 63 பேரில் 25 பேர்கள் ஐ.ஐ.டி.,க்கு தகுதி பெற்றனர். எஞ்சிய மாணவ, மாணவிகள் பிட்ஸ் பிலானி மற்றும் என். ஐ.டி., போன்ற நாட்டின் உயர்ந்த பிற கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்த சாதனை மாணவ, மாணவிகளுக்கு நெய்வேலி தெலுங்கு சமிதியில் பாராட்டு விழாநடந்தது. என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை தாங்கினார். சேர்மன் சுரேந்தர் மோகன் துணைவியார் சொர்ணகுமாரி, யோகமாயா  ஆச்சார்யா முன்னிலை வகித்தனர். முதன்மை பொது மேலாளர் மற்றும் தெலுங்கு  சமிதி தலைவர் வீரபிரசாத் வரவேற்றார்.


என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் பரிசு வழங்கிப் பேசுகையில்,

தமிழகத்தில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் அதிகபட்சமாணவர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளது பராட்டுக்குரியதாகும் என்றார். ஏற்பாடுகளை தெலுங்கு சமிதி தலைமை நிர்வாகிகள் சுப்பாராவ், ரகுமான் உட்பட பலர் செய்திருந்தனர்.



Read more »

செவ்வாய், ஜூன் 05, 2012

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவி திவ்யா முதலிடம்

கடலூர்: 

கடலூர் மாவட்டத்தில் 494 மதிப்பெண்கள் பெற்று நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 5 பேர் 493 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்ட அளவில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவி என்ற சாதனையை நிகழ்த்தினார். இதேபள்ளி மாணவி கலைவாணி, நெய்வேலி புனித ஜோசப் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இளமதி, கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ப்ரா மும்தாஸ், சரண்யா, சேத்தியாதோப்பு சந்திரா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரவீனா ஆகியோர் தலா 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

கடலூர் சி.கே ஸ்கூல் ஆப் ப்ராக்டிகல் நாலெட்ஜ் பள்ளி மாணவர் பார்த்தசாரதி, கடலூர் ஏர்.ஆல்.எல்.எம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் செந்தில்ராஜ், நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி ஏழிசை, சஞ்சனா ஆகியோர் தலா 492 மதிப்பெண் கள் பெற்று மாவட்ட அள வில் மூன்றாம் இடம் பிடித்தனர். கடலூர் மாவட்ட அள வில் சாதனை படைத்த பத்து மாணவர் களையும், ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ இன்று பாராட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் மற்றும் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

Read more »

திங்கள், அக்டோபர் 24, 2011

நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சர்வதேச தொழுநோய் மையத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர்

நெய்வேலி :

           நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சர்வதேச தொழுநோய் மையத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 137 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு சேவை செய்து வரும் 'லெப்ரஸி மிஷன் இன்டர்நேஷனல்' எனும் சர்வதேச தொழுநோய் தொண்டு மையம் பள்ளி மாணவர்களுக்கு சமூக சேவையில் வாய்ப்பளிக்கும் வகையில்'ஓர் உயிரை காப்பாற்று' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
 
          இத்திட்டத்தின் மூலம் தொழுநோயாளிகளுக்கு உதவும் வகையில், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் ஊக்கமளித்ததன் காரணமாக இப் பள்ளி மாணவ, மாணவிகள் தொண்டு நிறுவனத்திற்காக 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர். நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, மாணவர்கள் திரட்டிய நிதிக்கான காசோலையை தொழுநோய் தொண்டு மைய மேலாளர் பிராங்க்ளின் மில்டனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நெய்வேலி ஜவகர் கல்விக் கழக தலைமை நிர்வாகிகள் ராமலிங்கம், கமலநயணன், மோகன், ஜார்ஜ் ஜேக்கப், ஜவகர் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.









Read more »

சனி, ஜூலை 30, 2011

மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி மாணவி ஜி.பிரியங்கா தங்கம் வென்றார்

நெய்வேலி:

            சிவகாசியில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி ஜி.பிரியங்கா, டிரையத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

               மாநில தடகள சங்கமும், விருதுநகர் மாவட்ட தடகள சங்கமும் இணைந்து கடந்த 22 முதல் 24-ம் தேதிவரை மாநில அளவிலான தடகளப் போட்டியை சிவகாசியில் நடத்தியது. இதில் 14-வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் நெய்வேலி ஜவகர் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஜி.பிரியங்கா டிரையத்லான் பிரிவில் தங்கமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளியும் வென்றார். இதேபள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி எம்.தேவி நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 16-வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சி.டீனா 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

            மற்றொரு மாணவி எம்.கீதா நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.  இப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற மாணவிகளான ஜி.பிரியங்கா, எம்.தேவி மற்றும் சி.டீனா ஆகியோர் அடுத்தமாதம் 18-ம் தேதி முதல் 20ம் தேதிவரை  ஹைதராபாத்தில் நடக்கவுள்ள தென்னிந்திய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாக அணியின் மேலாளர் கிளையோபாஸ் தெரிவித்தார். 






Read more »

சனி, ஜூலை 17, 2010

நெய்வேலி ஜவகர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலி : 

             நெய்வேலி ஜவகர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன் தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர்.

              நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 17ல் இயங்கி வரும் ஜவகர் மெட்ரிக் பள்ளி முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு போன் வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இரவு 12 மணிக்குள் வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். போன் தகவலைக் கேட்டு திடுக்கிட்ட பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் தகவலின் பேரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் இரவே பள்ளியை முழுமையாக சோதனை செய்தனர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து நேற்று வழக்கம் போல் பள்ளி இயங்கியது.

               இந்நிலையில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் ஏட்டு ராமலிங்கம் தலைமையிலான வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் நேற்று பகல் 2 மணிக்கு பள்ளியில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதையும், போன் தகவல் புரளி என்பதையும் உறுதி செய்தனர்.

Read more »

வெள்ளி, மார்ச் 26, 2010

யோகா போட்டி: ஜவகர் பள்ளி மாணவர் சாதனை

நெய்வேலி: 

                      மாநில அளவிலான யோகாசன போட்டியில் நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் தங்க பதக் கம் வென்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கடந்த 9ம்   தேதி மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடந்தது. அதில் நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ., பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ராஜேஷ் நான்கு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். விருத்தாசலத்தில் நடந்த மாவட்ட அள விலான கோ-கோ போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தை பிடித்தனர்.  மாநில மற்றும் மாவட்ட  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

செவ்வாய், மார்ச் 23, 2010

முதியவர்களுக்கு உதவித் தொகை

நெய்வேலி:

                     நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்சி நடந்தது. நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு உதவிட நிதி வசூலித்தனர். அதனை ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்திடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ராமச் சந்திரன் வரவேற்றார். ஜவகர் கல்விக் கழக பொரு ளாளர் மதிவாணன் ஹெல்பேஜ் இந்தியாவின் உதவி இயக்குநர் சிவக்குமாரிடம் 6 லட்சத்து எட்டாயிரத்து 54 ரூபாயிற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜார்ஜ் ஜேக்கப், உறுப்பினர் ராமச்சந்திரன், ஆடிட்டர் சந்திரசேகர ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதரவற்ற முதியோர்களுக்கு அதிக அளவில் நிதி திரட்டிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப் பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior