உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தூக்கணாம்பாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூக்கணாம்பாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலூரில் புதிய வழித்தடத்தில் 2 பேருந்துகள்: எம்.எல்.ஏ. அய்யப்பன் துவக்கி வைத்தார்

கடலூர் : 

            புதிய வழித் தடங்களில் செல்லும் இரண்டு பஸ்களை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். 

              கடலூர் தொகுதிக்குட்பட்ட நல்லவாடு பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காகவும், கடலூரிலிருந்து புதுச்சேரி பகுதியில் உள்ள கடலூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கோரி பொதுமக்கள் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கடலூர் அரசு போக்குவரத்துக் கழகம் தடம் எண். 40 ஏ பஸ் நாள் ஒன்றுக்கு நான்கு முறை கடலூரிலிருந்து கன்னியக் கோவில் வழியாக நல்லாவாடுக்கும், தடம் எண். 40 பி புதுச்சேரி பகுதியில் உள்ள தமிழக கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கடலூரிலிருந்து திருவந்திபுரம், பில்லாலி, வெள்ளப்பாக்கம், அழகியநத்தம், வில்லியனூர் வழியாக பெரம்பைக்கு ஒரு பஸ்சையும் நேற்று முதல் இயக்கியது.

              தூக்கணாம்பாக்கத்தில் நடந்த துவக்க விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் கொடியசைத்து புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கி துவக்கி வைத்தார் .நிகழ்ச்சியில் ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் ஜெயபால், ஊராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், மீனாட்சி ஜெயமூர்த்தி, கவுன்சிலர் கஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஜெயச்சந்திரன், போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் முருகானந்தம், கிளை மேலாளர்கள் கணபதி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

கடலூர் அருகே துணிகரம்: பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து நகை பறித்த கொள்ளையன்; மோதிரத்தை தராததால் விரலை துண்டித்து எடுத்து சென்றான்

கடலூர்:

             கடலூர் அருகே தூக்கணாம்பாக்கத்தை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கெங்கம்மாள் (வயது 40). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் கலியம்மாள், சுமதி ஆகியோரும் ஏம்பலத்தில் நேற்று மாலை நடந்த காதணி விழாவுக்கு சென்றனர். பின்னர் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

              இரவு 10 மணியளவில் தென்னம்பாக்கம் அழகர் கோவில் அருகே வந்த போது பின்தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி திடீரென கலியம்மாள் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றி தரும்படி மிரட்டினான். இதனை பார்த்ததும் கெங்கம்மாளும், சுமதியும் பயந்து ஓடிவிட்டனர்.

                 இதையடுத்து அந்த ஆசாமி கலியம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டான். பின்னர் கலியம்மாளிடம் இடது கை சுண்டு விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி தரும்படி அந்த ஆசாமி கூறினார். ஆனால் கெங்கம்மாள் கழற்றி தரமறுத்து விட்டார்.

              இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் கலியம்மாளின் இடதுகை சுண்டு விரலை கத்தியால் வெட்டி மோதிரத்தோடு எடுத்து சென்று விட்டான். இதனால் கெங்கம்¢மாள் மயங்கி விழுந்தார். இதற் கிடையே நடந்த சம்பவம் குறித்து கெங்கம்மாளும், சுமதியும் கிராமத்துக்கு சென்று தெரிவித்தனர். கிராமமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

               பின்னர் மயங்கி கிடந்த கலியம்மாளை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விரலை துண்டித்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 05, 2010

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் காலனியில் குடி தண்ணீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

கடலூர்:

                கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் காலனியில் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். 

                 கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் காலனியில் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக காலனியில் குடிநீர் தண்ணீர் வழங்காததால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து இதே நிலை நீடித் ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7.30 மணிக்கு தூக்கணாம்பாக்கம் கடை வீதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அதில் உடன் நடவடிக்கை எடுத்து குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 8.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

செவ்வாய், ஜூன் 15, 2010

ஒரே இரவில் 2 வீடுகளில் திருட்டு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கடலூர் : 

                          கடலூர் அருகே ஒரே இரவில் இரண்டு வீடுகளில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர் களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த குட்டியாங்குப்பம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன் (36). இவரது மனைவி சுதா நேற்று முன் தினம் இரவு வீட்டின் வராண்டாவில் படுத்திருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஏழரை சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

                     சற்று நேரத்தில் அதே தெருவைச் சேர்ந்த ராஜாராமன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், பீரோவில் இருந்த வளையல், செயின், மோதிரம் உள்ளிட்ட 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். இரு சம்பவங்கள் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். ஒரே இரவில் இரண்டு வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் குட்டியாங்குப்பம் கிராம மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

Read more »

சனி, ஜூன் 05, 2010

மானிய விலையில் தானிய சேமிப்புக் கலன்கள் விநியோகம்


கடலூர்:

             கடலூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தானிய சேமிப்புக் கலன்கள் வழங்கப்படும் என்று, வேளாண் துறை வியாழக்கிழமை அறிவித்து உள்ளது.

வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                 தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில், தானிய சேமிப்புக் கலன்கள் 50 சதவீதம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒரு மெட்ரிக் டன், 0.5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த தானிய சேமிப்புக் கலன்களைப் பெற, விரும்பும் விவசாயிகள் கடலூர், கீழ்குமாரமங்கலம் மற்றும் தூக்கணாம்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தானிய சேமிப்புக் கலன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 


Read more »

வியாழன், மே 13, 2010

ஊராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் தலைவரின் கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

கடலூர் : 

                கவுன்சிலரை தாக்கிய ஊராட்சி தலைவரின் கணவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.

              கடலூர் அடுத்த எம்.பி.அகரம் ஊராட்சி தலைவர் பிரேமா. இவரது கணவர் ஞானப்பிரகாசம். தி.மு.க., கிளை செயலாளர். இவருக்கும் அதே ஊராட்சியில் 3வது வார்டு உறுப்பினர் இளங்கோவனுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் ஊராட்சி தலைவர் பிரேமா ஊராட்சி நிதியில் ஊழல் செய்ததாக இளங்கோவன் கலெக்டரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஊராட்சி தலைவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட் டது. அதன் அடிப்படையில் விசாரணைக்காக ஊராட்சி அலுவலத்திற்கு நேற்று காலை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.

                விசாரணைக்காக இளங்கோவன் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப் போது அங்கிருந்த பிரேமாவின் கணவர் ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் அய்யனார் (தே.மு.தி.க.,) இவரது தம்பி சங்கர், மற் றும் அதே ஊரைச் சேர்ந்த வினோத், சுரேஷ், சரவணன், ஸ்ரீதர், பிரபு ஆகியோர் இளங்கோவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த இளங்கோவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் துக்கணாம்பாக்கம் போலீசார், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் அய்யனார், சங்கர், வினோத், சுரேஷ், சரவணன், ஸ்ரீதர், பிரபு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior